பாலக்காடு - திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணி நடக்கிறது காரணமாக சில ரெயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாலக்காடு - திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
Published on

ஈரோடு,

கரூர் -திருச்சி வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்பு பணி நடக்கிறது. இதன் காரணமாக சில ரெயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பாலக்காடு டவுனில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட வேண்டிய பாலக்காடு டவுன் -திருச்சி சந்திப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16844) வருகிற 1, 2, 4, 5 ஆகிய தேதிகளில் குளித்தலையில் நிறுத்தப்படும்.

இதேபோல் திருச்சி சந்திப்பில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட வேண்டிய திருச்சி சந்திப்பு -பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16843) 1-ந்தேதி எலமானூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும். மேலும் திருச்சி சந்திப்பில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட வேண்டிய திருச்சி சந்திப்பு -பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16843) 2, 4 மற்றும் 5-ந்தேதிகளில் முத்தரசநல்லூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும் என்று சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com