செங்கோட்டை-மயிலாடுதுறை ரெயில் சேவையில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
செங்கோட்டை-மயிலாடுதுறை ரெயில் சேவையில் மாற்றம்
Published on

திருச்சி,

மதுரை ரெயில்வே கோட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால் அந்த வழியாக செல்லும் ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி செங்கோட்டையில் இருந்து காலை 6.55 மணிக்கு புறப்படும் செங்கோட்டை - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16848) நாளை (திங்கட்கிழமை) விருதுநகர் ரெயில் நிலையம் வந்து கல்லிகுடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், வையம்பட்டி, மணப்பாறை உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் வழியாக செல்லாது.

மாறாக, விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக மாற்றுப்பாதையில் திருச்சிக்கு வந்து பின்னர் மயிலாடுதுறைக்கு செல்லும். இந்த தகவல் திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com