தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா ரெயில் சேவையில் மாற்றம்


தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா ரெயில் சேவையில் மாற்றம்
x

அந்தியோதயா ரெயில், நெல்லை - நாகர்கோயில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை,

தாம்பரம் - நாகர்கோவில் இடையே அந்தியோதயா ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. முற்றிலும் முன்பதிவில்லாத பெட்டிகளை கொண்ட இந்த ரெயில் சேவையானது தாம்பரத்தில் இருந்து இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் நாகர்கோவிலை வந்தடைகிறது.

இந்த நிலையில், தாம்பரம் -நாகர்கோயில் அந்தியோதயா விரைவு ரெயில்(20691) வருகிற ஜூன் 22 முதல் ஜூலை 22 வரை நெல்லை வரை மட்டும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல நாகர்கோயிலில் இருந்து மாலை 3.50 மணிக்கு புறப்பட வேண்டிய ரெயில்(20692) வருகிற ஜூன் 23 முதல் ஜூலை 22 வரை நெல்லையில் இருந்து மாலை 5.10 மணிக்கு புறப்படும். அதாவது இந்த ரெயில், நெல்லை - நாகர்கோயில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

1 More update

Next Story