குருவாயூர் எக்ஸ்பிரஸ் பயண நேரத்தில் மாற்றம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குருவாயூர் எக்ஸ்பிரஸ்
Published on

சென்னை,

திருவனந்தபுரம் கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதால், சென்னை எழும்பூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பயண நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தாமதமாக செல்லும்

சென்னை எழும்பூரில் இருந்து காலை 10.40 மணிக்கு குருவாயூர் புறப்பட்டு செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16127), ஆகஸ்டு 9, 10 ஆகிய தேதிகளில் வழியில் 40 நிமிடம் தாமதமாக செல்லும்.

அதேபோல், இந்த ரெயில் ஆகஸ்டு 11, 12 தேதிகளில் 45 நிமிடங்கள் தாமதமாகவும், ஆகஸ்டு 27, 31 ஆகிய தேதிகளில் 30 நிமிடங்கள் தாமதமாகவும், ஆகஸ்டு 28, 29, செப்டம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் 50 நிமிடங்கள் தாமதமாகவும் செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com