

திருச்சி,
திருச்சி- காரைக்கால் டெமு ரெயில் நாகை கீழ் வேளூர் பகுதியில் நடை பெறும் பொறியியல் பணிகள் காரணமாக மே 1, 2, 4, 5 ஆகிய தேதி களில் திருச்சியில் இருந்து காலை 8.40 மணிக்கு புறப்பட்டு திருவாரூர் வரை மட்டுமே செல்லும். திருவாரூர்- காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இதே தேதிகளில் காரைக்கால்- திருச்சி டெமு ரெயில் சேவை காரைக்கால் திருவாரூர் இடையே பகுதியாக ரத்து செய் யப்படுவதால் திருவாரூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்படும். இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்துள்ளார்.