

திருச்சி,
”திருச்சி கோட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால் பின்வரும் ரெயில்களின் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. திருச்சி ஜங்ஷனில் இருந்து காலை 8.40 மணிக்கு புறப்படும் திருச்சி-காரைக்கால் டெமு ரெயில் (வண்டி எண்: 76820) வருகிற 6,7,8,9, 11 மற்றும் 12-ந்தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயி லானது திருச்சியில் இருந்து திருவாரூர் வரை மட்டுமே இயங்கும். மறு மார்க்கமாக காரைக்கால் திருச்சி டெமு ரெயில் (வண்டி எண்: 76819) மேற்கண்ட தேதிகளில் காரைக்கால் -திருவாரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயிலானது திருவாரூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் திருச்சியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும் திருச்சி பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 8, 10 மற்றும் 12-ந்தேதி களில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயிலானது திருச்சியில் இருந்து இருகூர் வரை மட்டுமே இயங்கும். பின்னர் இந்த ரெயிலானது இருகூரில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரெயிலாக பாலக்காடு டவுன் புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், திருச்சியில் இருந்து மதியம் 3.50 மணிக்கு புறப்படும் திருச்சி -ஈரோடு பாசஞ்சர் ரெயில்(வண்டி எண்:56105) வருகிற 7 மற்றும் 8-ந்தேதிகளில் மாலை 4.50 மணிக்கு புறப்பட்டு செல்லும். இதேபோல் திருச்சியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும் திருச்சி பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16843) வருகிற 9-ந்தேதி மதியம் 2 மணிக்கு புறப்பட்டு செல் லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.”
இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்து உள்ளார்.