திருச்சி-பாலக்காடு ரெயில் சேவையில் மாற்றம்

இன்று, 20 மற்றும் 24-ந்தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
திருச்சி-பாலக்காடு ரெயில் சேவையில் மாற்றம்
Published on

திருச்சி,

பாலக்காடு டவுனில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும் பாலக்காடு டவுன் - திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16844) இன்று (சனிக்கிழமை), 20 மற்றும் 24-ந்தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயிலானது பாலக்காடு டவுனில் இருந்து கரூர் வரை மட்டுமே இயங்கும். அதன்பிறகு, இந்த ரெயிலானது முன்பதிவில்லா சிறப்பு ரெயிலாக கரூரில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் மறுமார்க்கமாக திருச்சி ஜங்ஷனில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும் திருச்சி - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16843) மேற்கண்ட தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயிலானது திருச்சியில் இருந்து பெட்டவாய்த்தலை வரை மட்டுமே இயங்கும். தொடர்ந்து இந்த ரெயிலானது பெட்டவாய்த்தலையில் இருந்து பாலக்காடு டவுனுக்கு முன்பதிவில்லா சிறப்பு ரெயிலாக செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com