திருச்சி, செங்கோட்டை ரெயில்கள் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி, செங்கோட்டை ரெயில்கள் சேவையில் மாற்றம்
Published on

ஈரோடு,

ஈரோடு மற்றும் கரூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணிகள் மற்றும் பாலம் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் வருகிற 16-ந் தேதி, 19-ந்தேதி, 23-ந்தேதி மற்றும் 26-ந்தேதி ஆகிய 4 நாட் கள் கீழ்கண்ட ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருச்சியில் இருந்து ஈரோடு வரை இயக்கப்படும் பயணிகள் ரெயில் (வண்டி எண் 56809) வழக்கம்போல் காலை 7.25 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். கரூரில் இருந்து ஈரோட்டுக்கு இயக்கப்படாது.

இதேபோல் செங்கோட்டையில் இருந்து ஈரோட்டுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16846) வழக்கம்போல் 5.20 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். கரூரில் இருந்து ஈரோட்டுக்கு இயக்கப்படமாட்டது. மேலும் ஈரோட்டில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16845) ஈரோட்டில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக, கரூர் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 3.05-க்கு புறப்பட்டு செங்கோட்டைக்கு சென்றடையும். இந்த ரெயில் ஈரோட்டில் இருந்து கரூருக்கு இயக்கப்படாது.

இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com