திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

ரெயிலானது திருச்சியில் இருந்து திருநெல்வேலி வரை மட்டுமே இயங்கும்.
திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
Published on

திருச்சி,

திருச்சி ஜங்ஷனில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்படும் திருச்சி-திருவ னந்தபுரம் சென்ட்ரல் இன்டர்சிட்டி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 22627) வருகிற 30-ந்தேதி பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயிலானது திருச்சியில் இருந்து திருநெல்வேலி வரை மட்டுமே இயங்கும்.

மறுமார்க்கமாக திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து காலை 11.35 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம்-திருச்சி இன்டர்சிட்டி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 22628) மேற்கண்ட தேதியில் திருவனந்த புரம்- திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும் இந்த ரெயிலானது திருநெல்வேலியில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com