

சென்னை,
சென்னை எழும்பூ-விழுப்புரம் மாக்கத்தில், கருங்குழி யாடில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், வைகை, பல்லவன் ஆகிய விரைவு ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
மதுரை-சென்னை எழும்பூருக்கு ஜனவரி 5, 19 ஆகிய தேதிகளில் காலை 7 மணிக்கு இயக்கப்படும் வைகை அதிவிரைவு ரெயில் (12636) விழுப்புரம்-சென்னை எழும்பூ இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.
சென்னை எழும்பூ-காரைக்குடிக்கு ஜனவரி 5, 19 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.45 மணிக்கு புறப்படவேண்டிய பல்லவன் விரைவு ரெயில் (12605) சென்னை எழும்பூ-விழுப்புரம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரெயில் விழுப்புரத்தில் இருந்து மாலை 6.10 மணிக்கு புறப்படும்.
புதுச்சேரி-புதுடெல்லிக்கு ஜனவரி 5, 19 ஆகிய தேதிகளில் காலை 9.50 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரெயில் (22403) விழுப்புரம், காட்பாடி, பெரம்பூ, கூடூ வழியாக திருப்பிவிடப்படும் என தெற்கு ரெயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.