

கோவை,
முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்று இரு வாரங்களை கடந்துள்ளது. இந்த இரு வார காலகட்டத்தில் சில அமைச்சர்களின் அதிரடி நடவடிக்கள் தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தநிலையில், கோவையில் அமைச்சர் சம்பத்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
கோவைக்கு முதல்-அமைச்சர் விஜய் விரைவில் வருவார். கோவைக்கு மெட்ரோ ரெயில் கொண்டு வருவது தவெகவின் தேர்தல் வாக்குறுதியில் உள்ளது.
டாக்டர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. அரசு மருத்துவமனையில் விரைவில் மாற்றங்கள் வரும். அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யப்படும் என்றார்.