

சேலம்,
கோவை போத்தனூர் ரெயில்வே யார்டில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையொட்டி நாளை மறுநாள் (புதன்கிழமை) சேலம் வழியாக செல்லும் 2 ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி தன்பாத்-போத்தனூர் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16620) நாளை மறுநாள் கோவை ஜங்ஷன் ரெயில் நிலையம் வரை மட்டுமே செல்லும்.
இதேபோல் திருவனந்தபுரம் வடக்கு-கோரக்பூர் ரப்திசா கர் எக்ஸ்பிரஸ் ரெயில் (12512) அன்று மதுக்கரை ரெயில் நிலையத்தில் இருந்து 20 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு செல்லும். இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.