ராமேசுவரம்-திருப்பதி இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

ராமேசுவரம்-திருப்பதி இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பயணிகளின் வசதிக்காக ராமேசுவரம்-திருப்பதி இடையே செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ராமேசுவரத்தில் இருந்து திருப்பதிக்கு வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16780) அடுத்த மாதம் 3-ந் தேதி முதல் வாரத்திற்கு 4 நாட்கள் (செவ்வாய்க்கிழமையும் சேர்த்து) இயக்கப்படும்.

அதே போல, திருப்பதியில் இருந்து ராமேசுவரத்திற்கு வாரத்திற்கு 3 நாட்கள் இயக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில் (16779) அடுத்த மாதம் 4-ந் தேதி முதல் வாரத்திற்கு 4 நாட்கள் (புதன்கிழமையும் சேர்த்து) இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com