குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணி காரணமாக சில ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
Published on

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;

மதுரை கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக சில ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

* கன்னியாகுமரியில் இருந்து வருகிற 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் காலை 5.50 மணிக்கு புறப்பட்டு ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.12666), மதுரை, மானாமதுரை, காரைக்குடி. திருச்சி ஆகிய மாற்று பாதை வழியாக ஹவுரா செல்லும். கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் செல்லாது. கூடுதல் நிறுத்தமாக சிவகங்கை, புதுக்கோட்டை வழங் கப்பட்டு உள்ளது.

* குருவாயூரில் இருந்து வருகிற 4, 5, 6, 7, 8, 11, 12, 13, 14, 15, 18, 19, 20, 21, 22, 25, 26, 27, 28, 29 ஆகிய தேதிகளில் இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் ரெயில் (16128), மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்று பாதை வழியாக எழும்பூர் வரும். சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை செல் லாது. கூடுதல் நிறுத்தமாக சிவகங்கை, புதுக்கோட்டை வழங்கப்பட்டுள்ளது.

* கன்னியாகுமரியில் இருந்து வருகிற 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு ஐதராபாத் செல்லும் சிறப்பு ரெயில் (07229), மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்று பாதை வழியாக ஐதராபாத் செல்லும். கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் செல் லாது. கூடுதல் நிறுத்தமாக அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டை வழங்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com