

திருச்சி,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;
* குருவாயூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்படும் குருவாயூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16128) நாளை(வியாழக்கிழமை), 20, 22 ஆகிய தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி வந்து செல்லும்.
* சென்னை எழும்பூர் நிலையத்தில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர்- குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16127) இன்று (புதன்கிழமை) முதல் வழக்கமான அட்டவணைப்படியே இயங்கும். சென்னை எழும்பூர்- குருவாயூர் இடையே பகுதியாக இயங்காது என்ற அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
* நாகர்கோவிலில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் -கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16321) இன்று (புதன்கிழமை) 16 மற்றும் 21-ந் தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி வந்து செல்லும்.
* சாரலப்பள்ளியில் இருந்து மாலை 5.20 மணிக்கு புறப்படும் சாரலப்பள்ளி - திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 17077) இன்று முதல் வழக்கமான அட்டவணைப்படியே இயங்கும். சாரலப்பள்ளி - திருச்சி இடையே பகுதியாக இயங்காது என்ற அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
* பீகானேர் சந்திப்பில் இருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்படும் பீகானேர் - மதுரை அனுவ்ரத் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 22632) வருகிற 18-ந் தேதி 90 நிமிடம் தாமதமாக மாலை 5 மணிக்கு புறப்பட்டு செல்லும்.