கன்னியாகுமரி-பெங்களூரு ரெயில் சேவையில் மாற்றம்

கன்னியாகுமரி-பெங்களூரு இடையிலான ரெயில் சேவையில் மாற்றம் செய்து தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
கன்னியாகுமரி-பெங்களூரு ரெயில் சேவையில் மாற்றம்
Published on

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜபுரம் ரெயில் நிலைய பகுதியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கன்னியாகுமரியில் இருந்து வருகிற ஜூன் 7-ந்தேதி காலை 10.10 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16525), 1 மணி நேரம் 10 நிமிடம் தாமதமாக பெங்களூரு சென்றடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com