

திருச்சி,
திருச்சி கோட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால் பின்வரும் ரெயில்களின் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. செங்கோட்டை - மயிலாடு துறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:16848) வருகிற 16-ந்தேதி முதல் 21-ந்தேதி வரையிலும், மும்பை சி.எஸ்.டி.எம். எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16352) வருகிற 16 மற்றும் 19-ந்தேதிகளிலும், கன்னியாகுமரி ஹவுரா அதிவிரைவு எக்ஸ் பிரஸ் ரெயில் (வண்டி எண்: 12666) வருகிற 18-ந்தேதியிலும், கன்னியாகுமரி- ஐதராபாத் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 17070) வருகிற 17-ந்தேதியிலும் மதுரை. மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி வந்து செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் குருவாயூர்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் 1 ரெயில் (வண்டி எண்:16128) வருகிற 15-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையிலும், எர்ணாக்குளம் -வேளாங்கன்னி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16363) வருகிற 15-ந்தேதியிலும் மதுரை சந்திப்பை தவிர்த்து விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி வந்து செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை திருச்சி ரெயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்து உள்ளார்.