

திருச்சி,
திருச்சி கோட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால் பின்வரும் ரெயில்களின் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. செங்கோட்டை - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:16848) வருகிற 6-ந்தேதி முதல் 13-ந்தேதி வரையிலும், நாகர்கோவில்-மும்பை சி.எஸ்.டி.எம். எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16352) வருகிற 7 மற்றும் 10-ந்தேதிகளிலும், கன்னியாகுமரி ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 12666) வருகிற 9-ந்தேதியிலும், கன்னியாகுமரி - ஐதராபாத் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 17070) வருகிற 8-ந்தேதியிலும் மதுரை, மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி வந்து செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
குருவாயூர்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16128) வருகிற 6-ந்தேதி முதல் 13-ந்தேதி வரையிலும், எர்ணாகுளம் -வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16363) வருகிற 6 மற்றும் 13-ந்தேதிகளிலும், தூத்துக்குடி - கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 17616) வருகிற 6 மற்றும் 13-ந்தேதிகளில் மதுரை சந்திப்பை தவிர்த்து, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி வந்து செல்லும். இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்து உள்ளார்.