

திருச்சி,
திருச்சி கோட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், பின்வரும் ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
திருச்சி ஜங்ஷனில் இருந்து காலை 8.40 மணிக்கு புறப்படும் திருச்சி-காரைக்கால் டெமு ரெயில் (வண்டி எண் 76820) வருகிற 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை மற்றும் 21, 22-ந்தேதிகளில் திருவாரூர் வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயிலானது திருச்சியில் இருந்து திருவாரூர் வரை மட்டுமே இயங்கும்.
மறுமார்க்கமாக காரைக்காலில் இருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்படும் காரைக்கால் திருச்சி டெமு ரெயில் (வண்டி எண் 76819) மேற்கண்ட தேதிகளில் காரைக்கால்-திருவாரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயிலானது திருவாரூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு திருச்சி புறப்பட்டு செல்லும்.
இதேபோல், பாலக்காடு டவுனில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும் பாலக்காடு டவுன் திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 15, 17 மற்றும் 22-ந்தேதிகளில் புகலூர் வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயிலானது பாலக்காடு டவுன் -புகலூர் வரை மட்டுமே இயங்கும். இந்த ரெயிலானது புகலூரில் இருந்து திருச்சி வரை முன்பதிவில்லாத சிறப்பு ரெயிலாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.