திருச்சி வழியாக செல்லும் ரெயில்களின் சேவையில் மாற்றம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
திருச்சி வழியாக செல்லும் ரெயில்களின் சேவையில் மாற்றம்
Published on: 

திருச்சி,

திருச்சி வழியாக செல்லும் ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ரெயில்கள் சேவையில் மாற்றம்

குண்டக்கல் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கூடூர்- ரேணிகுண்டா திருப்பதி வழித்தடத்தில் ரேணிகுண்டா ரெயில் நிலைய யார்டில் தண்டவாள மறுசீரமைப்பு மற்றும் மின்னணு இன்டர்லாக்கிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, திருச்சி வழியாக செல்லும் ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப் பட்டு உள்ளது.

அதன்படி, சித்தூர், ரேணிகுண்டா, திருப்பதி ஆகிய சந்திப்புகளை தவிர்த்து திருநெல்வேலி கத்ரா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:16787) அடுத்த மாதம் டிசம்பர் 14 மற்றும் 21-ந்தேதிகளில் காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் மற்றும் கூடூர் வழியாகவும், ஐதராபாத் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:17069) அடுத்த மாதம் டிசம்பர் 9, 16, 23-ந்தேதிகளில் கூடூர், பெரம்பூர், அரக்கோணம். காட்பாடி வழியாகவும், மறுமார்க்கமாக கன்னியாகுமரி -ஐதராபாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:17070) வருகிற டிசம்பர் மாதம் 11, 18, 25-ந்தேதிகளில் காட் பாடி, அரக்கோணம், பெரம்பூர், கூடூர் வழியகாவும் இயக்கப்படுகிறது.

சார்லப்பள்ளி - திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில்

சார்லப்பள்ளி -திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:17077) வருகிற டிசம்பர் மாதம் 15, 22-ந்தேதிகளில் கூடூர், பெரம்பூர், அரக்கோணம் வழியாகவும், மறுமார்க்கமாக திருச்சி-சார்லப்பள்ளி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:17078) அடுத்த மாதம் டிசம்பர் 9, 16, 23-ந்தேதிகளில் காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், கூடூர் வழியாக திருப்பி விடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல், மும்பை (எல்.டி.டி.)- மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டிஎண்:22101) அடுத்த மாதம் டிசம்பர் 9, 16, 23 ஆகிய தேதிகளில் கடப்பா. ராசம்பேட்டை, ரேணிகுண்டா, திருத்தணி ஆகிய சந்திப்புகளை தவிர்த்து கூட்டி. தர்மாவரம், கிருஷ்ணராஜபுரம், அரக்கோணம் வழியாக இயக்கப்படுகிறது.

X