ஈரோடு வழியாக செல்லும் ரெயில் சேவைகளில் மாற்றம்

விவேக் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை மறுநாள் முதல் மேற்கு வங்காள மாநிலம் ஷாலிமார் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
ஈரோடு வழியாக செல்லும் ரெயில் சேவைகளில் மாற்றம்
Published on: 

ஈரோடு,

ஈரோடு வழியாக செல்லும் ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சாந்த்ராகாச்சி சந்திப்பு-மங்களூரு சென்டிரல் விவேக் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22851) நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் மேற்கு வங்காள மாநிலம் ஷாலிமார் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும். அதாவது ஷாலிமார் மங்களூரு சென்டிரல் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலாக இயக்கப்படும்.

விவேக் எக்ஸ்பிரஸ்

இதேபோல் மங்களூரு சென்டிரல்- சாந்த்ராகாச்சி சந்திப்பு விவேக் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22852) வருகிற 31-ந்தேதி முதல் ஷாலிமார் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும். அதாவது மங்களூரு சென்டிரல்- ஷாலிமார் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலாக இயக்கப்படும் என்று சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com