

திருச்சி,
பகுதியாக ரத்து
திருச்சி ரெயில்வே கோட்டத்தின் பல பகுதிகளில் பொறியியல் பணிகள் நடைபெற்று வருவதால் வண்டி எண் -76820 திருச்சி காரைக்கால் டெமு ரெயில் ஜூன் 10, 11, 12, 13, 15, 16 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து காலை 8.40 மணிக்கு புறப்பட்டு திருவாரூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும். திருவாரூரில் இருந்து காரைக்கால் வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இதே போல் வண்டி எண்- 76819 காரைக்கால்- திருச்சி டெமு ரெயில் ஜூன் 10, 11, 12, 13, 15, 16 ஆகிய தேதிகளில் திருவாரூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு வரும். காரைக்கால் முதல் திருவாரூர் வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
சேலம் கோட்டத்தில் பல இடங்களில் பொறியியல் பணிகள் நடந்து வருவ தால் திருச்சி- பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரெயில் ஜூன் 12, 14, 16 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு ஈரோடு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும். ஈரோடு முதல் பாலக்காடு வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
வழித்தடம் மாற்றம்
மதுரை கோட்டத்தில் பல இடங்களில் பொறியியல் பணிகள் நடந்து வரு வதால் செங்கோட்டை- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் ஜூன் 10 முதல் 16-ந்தேதி வரை மதுரை, மானாமதுரை, காரைக்குடி, புதுக் கோட்டை, கீரனூர் வழியாக திருச்சி வரும். திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை செல்வது தவிர்க்கப்படும்.
நாகர்கோவில்- மும்பை சி.எஸ்.டி.எம். எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 11 மற் றும் 14 ஆகிய தேதிகளில் மதுரை, மானாமதுரை, காரைக்குடி, புதுக் கோட்டை, திருச்சி வழியாக இயக்கப்படும். திண்டுக்கல் செல்வது தவிர்க் கப்படும்.
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்
குருவாயூர்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஜூன் 10 முதல் 15-ந்தேதி வரை விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக இயக்கப்படும். மதுரை, சோழவந்தான், கொடைரோடு. திண்டுக்கல் செல்வது தவிர்க்கப்படும்.
கன்னியாகுமரி- ஐதராபாத் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 12-ந்தேதி மதுரை, மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக இயக்கப் படும். கொடைரோடு, திண்டுக்கல் செல்வது தவிர்க்கப்படும்.
இந்த தகவல்களை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்து உள்ளார்.