பெங்களூரு-மதுரை வந்தே பாரத் ரெயில் சேவையில் மாற்றம்

பெங்களூரு-மதுரை வந்தே பாரத் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு-மதுரை வந்தே பாரத் ரெயில் சேவையில் மாற்றம்
Published on

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை கோட்டம் ஜோலார்பேட்டையில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் சில ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* பெங்களூருவில் இருந்து இன்று (புதன்கிழமை), 19,24 ஆகிய தேதிகளில் காலை 8.45 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை வரும் பயணிகள் ரெயில் (வண்டி எண்.66550), சோமநாயக்கன்பட்டி-ஜோலார்பேட்டை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, சோமநாயக்கன்பட்டியில் நிறுத்தப்படும்.

* ஈரோடில் இருந்து மேற்கண்ட தேதிகளில் காலை 6 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை வரும் பயணிகள் ரெயில் (56108), திருப்பத்தூர்-ஜோலார்பேட்டை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, திருப்பத்தூரில் நிறுத்தப்படும்.

* ஜோலார்பேட்டையில் இருந்து மேற்கண்ட தேதிகளில் மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு ஈரோடு செல்லும் பயணிகள் ரெயில் ஜோலார்பேட்டை-திருப்பத்தூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, திருப்பத் தூரில் இருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்பட்டு ஈரோடு செல்லும்.

* ஜோலார்பேட்டையில் இருந்து மேற்கண்ட தேதிகளில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு செல்லும் பயணிகள் ரெயில் (66549), ஜோலார்பேட்டை-சோமநாயக்கன்பட்டி இடையே பகுதி நேரம் ரத்து செய் யப்பட்டு, சோமநாயக்கன்பட்டியில் இருந்து மாலை 3.12 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு செல்லும்.

* பெங்களூருவில் இருந்து இன்று (புதன்கிழமை), 19 ஆகிய தேதிகளில் மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு மதுரை வரும் வந்தே பாரத் ரெயில் (20672), 45 நிமிடம் தாமதமாக மதுரை வந்தடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com