கடலூர்- சேலம் ரெயில் சேவையில் மாற்றம்

தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடலூர்- சேலம் ரெயில் சேவையில் மாற்றம்
Published on

சேலம்,

சேலம் மார்க்கெட் ரெயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் கடலூர் துறைமுகம்- சேலம் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கடலூர் துறைமுகம் - சேலம் ஜங்ஷன் (வண்டி எண்: 76813) 12, 13, 15, 16, 17, 18, 19, தேதிகளில் கடலூர் துறைமுகத்தில் இருந்து வழக்கம்போல் காலை 4.45 மணிக்கு புறப்பட்டு சேலம் டவுன் ரெயில் நிலையத்துடன் சேவை நிறுத்தப்படும்.

தண்டவாள பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர், சேலம் டவுன் ரெயில் நிலையத்தில் இருந்து சேலம் ஜங்ஷன் வரை அதே ரெயிலின் நிறுத்தங்களுடன் முன்பதிவில்லா சிறப்பு ரெயிலாக இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com