சென்னை சென்டிரல்-அரக்கோணம் வழித்தடத்தில் மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரெயில் திருத்தணி-திருவாலங்காடு இடையே பகுதிநேரமாக ரத்துசெய்யப்படுகிறது
சென்னை சென்டிரல்-அரக்கோணம் வழித்தடத்தில் மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
Published on

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்டிரல்- அரக்கோணம் வழித்தடத்தில் செல்லும் மின்சார ரெயில்கள் ஜூன் 8-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

*அரக்கோணத்தில் இருந்து அதிகாலை 4, 5 மணிக்கு புறப்பட்டு திருத்தணி செல்லும் மின்சார ரெயில்கள், திருத்தணியில் இருந்து இரவு 9.15, 11.10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில்கள் மற்றும் திருத்தணியில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு சென்னை மூர் மார்க்கெட் செல்லும் மின்சார ரெயில் ஆகியவை முழுநேரமாக ரத்து செய்யப்படுகிறது.

*சென்னை கடற்கரையில் இருந்து அதிகாலை 4.05, மதியம் 2.25, மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில்கள், ஆவடியில் இருந்து காலை 6.20 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில் மற்றும் சென்னை மூர் மார்க்கெட்டில் இருந்து காலை 6.30, 9.10, 10.30, 11, மதியம் 12.40, 1.25, 3.45, மாலை 4.45, 5.15, 5.45, 6.05, 6.40, இரவு 7.30, 8.20, 9.10, 10, 10.55 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில்கள் ஆகியவை திருவாலங்காடு-அரக்கோணம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.

*அரக்கோணத்தில் இருந்து அதிகாலை 3.45, 4.25, 5.25, காலை 6.40, 8.15, 8.55, 11.15, மதியம் 2.25, 3.40, மாலை 4.50, 6, இரவு 7, 7.25, 8.25, 8.50, 9.45 மணிக்கு புறப்பட்டு சென்னை மூர் மார்க்கெட் செல்லும் மின்சார ரெயில்களும், அரக்கோணத்தில் இருந்து காலை 6.20, 6.50, 7.35, மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில்களும் அரக்கோணம்-திருவாலங்காடு இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.

*திருத்தணியில் இருந்து மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு சென்னை மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரெயில் திருத்தணி-திருவாலங்காடு இடையே பகுதிநேரமாக ரத்துசெய்யப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com