பராமரிப்பு பணி காரணமாக ஈரோடு - ஜோலார்பேட்டை ரெயில் சேவையில் மாற்றம்

மொரப்பூரில் இருந்து ஜோலார்பேட்டை வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
பராமரிப்பு பணி காரணமாக ஈரோடு - ஜோலார்பேட்டை ரெயில் சேவையில் மாற்றம்
Published on: 

ஈரோடு,

சமல்பட்டி-கங்கன்கரை ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் ஈரோட்டில் இருந்து செல்லும் ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப் பட்டுள்ளன. அதன்படி ஈரோடு-ஜோலார்பேட்டை பாசஞ்சர் ரெயில் (வண்டி எண்- 56108) நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மொரப்பூர் ரெயில் நிலையம் வரை மட்டுமே இயங்கும்.

பகுதியாக ரத்து

அதாவது மொரப்பூரில் இருந்து ஜோலார்பேட்டை வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. ஜோலார் பேட்டை- ஈரோடு பாசஞ்சர் ரெயில் (வண்டி எண்- 56107) மொரப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும். அதாவது ஜோலார்பேட்டையில் இருந்து மொரப்பூர் வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. கொல்லம்- ஸ்ரீகாகுளம் ரோடு சிறப்பு ரெயில் (வண்டி எண்-08540) ஏதாவது ஒரு இடத்தில் 35 நிமிடங்கள் நின்று செல்லும் என்று சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

X