காரைக்கால், பாலக்காடு ரெயில்கள் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
காரைக்கால், பாலக்காடு ரெயில்கள் சேவையில் மாற்றம்
Published on

திருச்சி,

பராமரிப்பு பணிகள் காரணமாக காரைக்கால், பாலக்காடு ரெயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

திருச்சி-காரைக்கால் டெமு ரெயில்

திருச்சி, சேலம் ரெயில்வே கோட்டத்தில் பல்வேறு பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதன் காரணமாக சில ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரெயில்கள் புறப்படும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்விவரம் வருமாறு:-

நாளை (புதன்கிழமை) முதல் வருகிற 30-ந்தேதி வரை (29-ந்தேதி தவிர) திருச்சியில் காலை 8.40 மணிக்கு புறப்படும் திருச்சி-காரைக்கால் டெமு ரெயில் (எண்:76820) திருவாரூர் வரை மட்டுமே இயங்கும். அதுபோல் மறுமார்க்கத்தில் காரைக்காலில் இருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்பட வேண்டிய காரைக்கால்-திருச்சி டெமு ரெயில் (எண்:76819) திருவாரூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு திருச்சி வந்தடையும். அந்த நாட்களில் காரைக்காலில் இருந்து புறப்படாது.

பாலக்காடு டவுன்-திருச்சி

அதுபோல் பாலக்காடு டவுன்-திருச்சி எக்ஸ்பிரஸ் (எண்:16844) வருகிற 24-ந்தேதி, 26-ந்தேதி, 29-ந்தேதி ஆகிய நாட்களில் புகளூர் வரை மட்டுமே இயக்கப்படும். மேற்கண்ட நாட்களில் இந்த ரெயில் திருச்சிக்கு வராது. அன்று தண்டவாள பராமரிப்பு பணிகள் முடிந்தபிறகு திருச்சிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயிலாக புகழூரில் இருந்து இயக்கப்படும்.

அதுபோல் நாளை (புதன்கிழமை) முதல் வருகிற 30-ந்தேதி வரை (29-ந்தேதி தவிர காரைக்கால்-தஞ்சை பயணிகள் ரெயில் (எண்:56817) 15 நிமிடமும், 26-ந்தேதி, 29-ந்தேதிகளில் திருச்சி-மயிலாடுதுறை மெமு எக்ஸ்பிரஸ் (எண்:16834) 30 நிமிடமும், 29-ந்தேதி ஈரோடு- திருச்சி பயணிகள் ரெயில் (எண்:56106) 50 நிமிடமும், காரைக்குடி-திருச்சி பயணிகள் ரெயில் (எண்:56832) 40 நிமிடமும் தாமதமாக செல்லும். காரைக்குடியில் இருந்து வருகிற 24-ந்தேதி காலை 5.40 மணிக்கு புறப்படும் காரைக்குடி-சென்னை எழும்பூர் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் 15 நிமிடங்களும், 26-ந்தேதி ராமேசுவரம் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் (எண்:20498) 2 மணி நேரம் தாமதமாக செல்லும்.

அத்துடன் திருச்சி-சென்னை எழும்பூர் சோழன் எக்ஸ்பிரஸ் (எண்:22676) 29-ந்தேதி 20 நிமிடம் தாமதமாக பகல் 12.30 மணிக்கு புறப்பட்டு செல்லும். மேலும் சென்னை எழும்பூர்-குருவாயூர் எக்ஸ்பிரஸ் (எண்:16127) 26-ந்தேதி, 28-ந்தேதி, 30-ந்தேதி ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து 1 மணி நேரம் தாமதமாக பகல் 12.10 மணிக்கு புறப்படும்.

இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com