

திருச்சி,
திருச்சி ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் பிரிவுக்கு இடையே பொறியியல் பராமரிப்புகள் நடைபெற உள்ளன. இதனால் மயிலாடுதுறை - செங்கோட்டை ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, திருச்சியில் இருந்து காலை 6.05 மணிக்கு புறப்படும் திருச்சி-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் (எண்:56700) இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) ஆடுதுறை வரை மட்டுமே செல்லும். இந்த 2 நாட்களும் மயிலாடுதுறைக்கு செல்லாது.
அதுபோல் மயிலாடுதுறையில் இருந்து பகல் 12.35 மணிக்கு புறப்படும் மயிலாடுதுறை-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் (எண்:16847) இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) மயிலாடுதுறையில் இருந்து புறப்படாது. அதற்கு பதிலாக ஆடுதுறையில் இருந்து பகல் 12.58 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டைக்கு செல்லும். இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.