

சென்னை,
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் 10 மற்றும் 11-வது நடைமேடை களில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரண மாக, மின்சார ரெயில்கள், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வந்து செல்லும் 5, 6-வது நடைமேடை வழியாக வந்து செல்கின்றன.
இதுபோன்ற பராமரிப்பு பணிகள் காரணமாக தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பல ரெயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. தற்போது வேறு சில முக்கிய ரெயில்களும் இடமாற்றம் செய்யப்பட உள்ளன.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி,
* எழும்பூரில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12661) வருகிற 17-ந் தேதி முதல் ஏப்ரல் 6-ந் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
* நெல்லையில் இருந்து எழும்பூருக்கு வரும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் (12632) வருகிற 16-ந் தேதி முதல் ஏப்ரல் 5-ந் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக தாம்பரம் சென்றடையும்.
* எழும்பூரில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் (22675) வருகிற 16-ந் தேதியில் இருந்து ஏப் ரல் 5-ந் தேதி வரை 2.15 நிமிடம் தாமதமாக எழும்பூரில் இருந்து காலை 10.15 மணிக்கு புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்படுகிறது.