

ஈரோடு,
திருச்சி சந்திப்பு ரெயில்வே யார்டில் மின் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக ஈரோடு -திருச்சி சந்திப்பு பாசஞ்சர் ரெயில் (வண்டி எண் 56106) சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ஈரோடு சந்திப்பிலிருந்து காலை 8.05 மணிக்கு கிளம்பும் ஈரோடு -திருச்சி சந்திப்பு பாசஞ்சர் ரெயில் இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் வருகிற 11, 18-ந்தேதிகளில் திருச்சி கோட்டை ரெயில் நிலையத்தில் 40 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும் என்று சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.