

ஈரோடு,
மூர்த்திப்பாளையம் மற்றும் கரூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் பாதை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக ஈரோடு வழியாக செல்லும் 3 ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி செங்கோட்டையில் இருந்து காலை 5.20 மணிக்கு புறப்படும் செங்கோட்டை-ஈரோடு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16846) இன் றும் (செவ்வாய்க்கிழமை), நாளை மறுநாளும் (வியாழக்கிழமை) கரூர் சந்திப்பு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும். இந்த ரெயில் கரூரில் இருந்து ஈரோடு வராது.
இதேபோல் கோவையில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16322) இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளை மறுநாளும் (வியாழக்கிழமை) கோவை, திண்டுக்கல் இடையே மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்றும், பாலக்காடு டவுன் திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண். 16844) சேவையிலும் இன்றும் (செவ்வாய்க்கிழமை) நாளை மறுநாளும் (வியாழக்கிழமை) மாற்றம் செய் யப்பட்டுள்ளதாக சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.