

சேலம்,
ஈரோடு- திருப்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ஊத்துக்குளி ரெயில் நிலைய யார்டு பகுதியில் ரெயில்வே பாலம் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை மேற்கொள்வதற்கு வசதியாக நாளை (புதன்கிழமை) 3 ரெயில்கள் வழித்தடத்தில் ஏதாவது ஒரு இடத்தில் தாமதப்படுத்தி இயக்கப்பட உள்ளன.
அதன்படி எர்ணாகுளம்- டாடாநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் (18190) வழித்தடத்தில் ஏதாவது ஒரு இடத்தில் 1 மணி 10 நிமிடங்கள் தாமதப்படுத்தி இயக்கப்படும். ஆலப்புழா- தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (13352) வழித்தடத்தில் ஏதாவது ஒரு இடத்தில் 50 நிமிடங்கள் தாமதப்படுத்தி இயக்கப்படும். இதேபோல் எர்ணாகுளம்- பெங்களூரு இன் டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (16378) வழித்தடத்தில் ஏதாவது ஒரு இடத்தில் 15 நிமிடங்கள் தாமதப்படுத்தி இயக்கப்படும் என்று சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.