

திருப்பூர்,
கரூர் ரெயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (செவ்வாய்க்கிழமை) ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி திருச்சி-பாலக்காடு ரெயில் நாளை திருச்சியில் இருந்து கரூர் வரை இயக்கப்படாது. அந்த ரெயில் மதியம் 2.20 மணிக்கு கரூரில் இருந்து பாலக்காடு வரை இயக்கப்படும். இந்த தகவலை ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.