

திருச்சி,
திருச்சி ஜங்ஷனில் இருந்து மாலை 4.20 மணிக்கு புறப்படும் திருச்சி - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:16834) இன்று (சனிக்கிழமை ) மற்றும் 12,13-ந்தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயிலானது திருவெறும்பூரில் இருந்து மாலை 4.28 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும்.
இந்த ரெயில் திருச்சி - தஞ்சாவூர் இடையே பகுதியாக இயங்காது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்து உள்ளார்.