

திருச்சி,
திருச்சி-வேளாங்கண்ணி இடையே இயக்கப்பட்டு வந்த டெமு ரெயில் சேவை, காரைக்கால்-திருச்சி ரெயிலாக மறுசீரமைப்பு செய்யப்பட்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின்படி வண்டிஎண்: 76826 திருச்சி-காரைக் கால் டெமு ரெயில் வருகிற மே மாதம் 20-ந் தேதி முதல் திருச்சியில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு இரவு 9.20 மணிக்கு காரைக்கால் சென்றடையும்.
இதேபோல் வண்டிஎண்: 76825 காரைக்கால்-திருச்சி டெமு ரெயில் வருகிற மே மாதம் 21-ந் தேதி காரைக்காலில் இருந்து அதிகாலை 6.35 மணிக்கு புறப்பட்டு காலை 11.20 மணிக்கு திருச்சிக்கு வந்து சேரும். இந்த ரெயில்கள் வேளாங்கண்ணியை தவிர்த்து, நாகூர், நாகப்பட்டினம் வழியாக காரைக்காலுக்கு செல்கின்றன. இந்த தகவல் திருச்சி ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.