

சென்னை,
தமிழ்நாடு முழுவதும் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 184 விற்பனை நிலையங்கள் மூலம் இதுவரை 16 மெட்ரிக் டன் அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருபப்தாவது:-
தமிழ்நாடு முழுவதும் அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 184 விற்பனை நிலையங்கள் மூலம் 16 மெட்ரிக் டன் அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு, பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, சன்னரக அரிசியின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு முழுவதும் அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30 (பொட்டலத்துடன்) என்ற விலையில் சன்னரக அரிசி விற்பனை கடந்த 17-ந் தேதி அன்று சென்னையில் முதற்கட்டமாக 30 இடங்களில் தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் இத்திட்டத்திற்காகத் மொத்தம் 995 மெட்ரிக் டன் சன்னரக அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டு. இதில், 574.058 மெட்ரிக் டன் அரிசி 34 மாவட்டங்களுக்குப் அனுப்பப்பட்டது. அவற்றில் 439.108 மெட்ரிக் டன் அரிசி விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் 34 மாவட்டங்களில் மொத்தம் 184 விற்பனை நிலையங்கள் (Sale Points) மூலம் சன்னரக அரிசி விற்பனை நடைபெற்று, 21.10.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 16 மெட்ரிக் டன் சன்னரக அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னையில் உள்ள 19 விற்பனை நிலையங்கள் மூலம் இதுவரை 1,286 கிலோ சன்னரக அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி நகரக் கூட்டுறவுச் சங்கத்தின் மாநகராட்சி வணிக வளாக விற்பனை முனையில் 298 கிலோவும், கார்த்திகேயன் சாலையில் உள்ள விற்பனை முனையில் 178 கிலோவும், பார்க் டவுன் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலையின் விற்பனை முனையில் 120 கிலோவும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கு சன்னரக அரிசி குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்வதுடன், அரிசி விலை அரிசி விலை உயர்வால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் வகையிலும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.