சிவசங்கர்பாபா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபா மீது, 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
சிவசங்கர்பாபா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
Published on

சென்னை,

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது அந்த பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர்.புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபா மீது, 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 40 பேர் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டனர். சுஷில் ஹரி பள்ளி ஆசிரியைகள் பாரதி, சுஷ்மிதா, தீபா ஆகியோர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com