மது பாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூலா..? இந்த எண்ணில் புகார் தரலாம்

டாஸ்மாக் குறித்த புகார்களை அளிப்பதற்கான அதிகாரப்பூர்வ தளங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
மது பாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூலா..? இந்த எண்ணில் புகார் தரலாம்
Published on

சென்னை,

மது கடைகள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் மது பிரியர்கள் தங்களின் புகார்களை தெரிவிக்க வாடிக்கையாளர் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளதாக மது​விலக்கு, ஆயத்​தீர்வை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

டாஸ்​மாக் சில்​லறை விற்​பனை நிலை​யங்​கள் மற்​றும் சேவை​கள் தொடர்​பாக நுகர்​வோர், பொது​மக்​கள் தங்​களது புகார்​கள், குறை​கள் மற்​றும் இதர பிரச்​சினை​களை தெரிவிக்​கும் வகை​யில், டாஸ்​மாக் கட்​ட​ணமில்லா வாடிக்​கை​யாளர் சேவை மையம் ஆக.31-ம் தேதி முதல் செயல்​பாட்​டுக்கு கொண்டு வரப்​பட்​டுள்​ளது.

அதன்​படி, கட்​ட​ணமில்லா தொலைபேசி எண் 1800-889-2015 மற்றும் அதி​காரப்​பூர்வ வாட்​ஸ்​அப் எண் 73977 20230 ஆகிய​வற்​றைத் தொடர்​பு​கொண்டு 24 மணி நேர​மும் தெரிவிக்​கலாம். மேலும், டாஸ்​மாக் நிறு​வனத்​தின் அதி​காரப்​பூர்வ சமூக ஊடக கணக்​கு​கள் மூல​மும் புகார் தெரிவிக்​கலாம். புகார்​கள் மீதான நடவடிக்கை தொடர்ந்து கண்​காணிக்​கப்​படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com