தேர் வெள்ளோட்டம்

முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழாவினை முன்னிட்டு தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
தேர் வெள்ளோட்டம்
Published on

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா வருகிற 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. பொங்கல் விழாவை முன்னிட்டு திருத்தேர் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான திருத்தேர் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது. முத்து மாரியம்மன் கோவிலில் இருந்து தொடங்கி பஜார் பகுதி வழியாக சென்று மீண்டும் கோவிலில் தேர்நிலை அடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை நாடார்கள் உறவின்முறை தலைவர் காமராஜன், கோவில் டிரஸ்டி ராஜரத்தினம் செய்திருந்தனர். தேர் வெள்ளோட்ட விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com