சாத்தூ நகரசபை கூட்டம்

சாத்தூ நகரசபை கூட்டம் நடைபெற்றது.
சாத்தூ நகரசபை கூட்டம்
Published on

சாத்தூர், 

சாத்தூர் நகரசபை கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் குருசாமி தலைமை தாங்கினார். நகர்மன்ற துணைத்தலைவர் அசோக், நகராட்சி ஆணையாளர் இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள், மேலாளர் ஷாஜகான் (எ) மொஹைதீன் பிச்சை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மேலும் கூட்டத்தின் போது கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் முழுமையாக நிறைவு பெறாத தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்கவும், சாலை மற்றும் தெருக்களில் திரியும் மாடுகளை கட்டுப்படுத்தவும் கோரிக்கை விடுத்தனர். கூட்டத்தில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com