கல்வராயன்மலையில் 10 இடங்களில் சோதனை சாவடிகள் அமைப்பு

சாராயம் காய்ச்சுவது, கடத்தலை தடுக்க கல்வராயன்மலையில் 10 இடங்களில் சோதனை சாவடிகள் அமைப்பு
கல்வராயன்மலையில் 10 இடங்களில் சோதனை சாவடிகள் அமைப்பு
Published on

கச்சிராயப்பாளையம்

கல்வராயன்மலை அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. இங்குள்ள நீரோடைகளில் வரும் தண்ணீர் மற்றும் மூலப்பொருட்களை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் சாராயம் காய்ச்சி மலை அடிவார பகுதியான சின்னசேலம், சங்கராபுரம் வழியாக பல்வேறு கிராமங்களுக்கு கடத்தி சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைத்து சாராய தொழில்களில் ஈடுபட்டு வரும் நபர்களையும், இவர்களுக்கு துணையாக இருக்கும் போலீசார் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் கல்வராயன்மலையில் சாராயம் காய்ச்சி கடத்தி வருவதை தடுக்கும் வகையில் கல்வராயன்மலை அடிவாரம் சின்னசேலம் அருகே உள்ள கல்லாநத்தம் வனப்பகுதியிலும், கச்சிராயப்பாளையம் அருகே உள்ள மட்டப் பாறை, தூரூர், மாயம்பாடி, சங்கராபுரம் அருகே மூலக்காடு, லக்கிநாயக்கன்பட்டி என சுமார் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com