

செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் அருகே வேடல் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி செந்தாமரை (வயது 50). எலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி சாந்தி(60). இவர்கள் இருவரும் நேற்று மாலை பவுஞ்சூர் அடுத்த பெரிய வெளிக்காடு பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பள்ளிக்குச் சொந்தமான வேன், இருவர் மீதும் மோதியது.
இதில் படுகாயம் அடைந்த செந்தாமரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த சாந்தி, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இருவரது உறவினர்களும் உடனடியாக வராததால், பிரேத பரிசோதனை முடியும் வரை உடல்களை மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் வைத்திருக்குமாறு அணைக்கட்டு போலீசார் ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு கடிதம் அளித்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் பூங்குன்றன் உத்தரவின்பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.