செங்கல்பட்டு தடுப்பூசி பூங்காவை மூடுவதா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்

செங்கல்பட்டு தடுப்பூசி பூங்காவை மூடுவதா? டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு தடுப்பூசி பூங்காவை மூடுவதா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்
Published on

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் தடுப்பூசிகள் தேவையை பூர்த்தி செய்வதற்காக டாக்டர் அன்புமணி ராமதாசின் முயற்சியால் செங்கல்பட்டில் அமைக்கப்பட்டு உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி பூங்காவை மூட முயற்சிகள் நடப்பதாக வெளிவரும் செய்திகள் கடும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கின்றன. தடுப்பூசி வளாகத்தை மூட மத்திய அரசு தீர்மானித்திருப்பது உண்மை என்றால், அது கண்டிக்கத்தக்கது.

செங்கல்பட்டு தடுப்பூசி பூங்காவில் உற்பத்தி செய்யப்பட உள்ள மருந்துகள் அனைத்தும் உலகத்தரம் வாய்ந்தவை என்பதால், அவற்றின் இந்தியாவின் தேவைக்கு போக மீதம் உள்ள தடுப்பூசி மருந்துகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். அவற்றை வாங்கி கொள்ள உலக நாடுகள் தயாராக உள்ளன. இது மத்திய அரசின் எந்த பொதுத்துறை நிறுவனத்துக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பு ஆகும்.

ஆனால் தடுப்பூசி பூங்காவை அமைக்கும் எச்.எல்.எல். பயோடெக்கின் தாய் நிறுவனமான எச்.எல்.எல் லைப் கேரை பங்கு விற்பனை மூலம் தனியாருக்கு தாரை வார்க்க இருப்பது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் ஆகும். எச்.எல்.எல் பயோடெக்கை தனி பொதுத்துறை நிறுவனமாக மாற்றி மத்திய அரசே நடத்தலாம். ஒருவேளை இது மத்திய அரசால் சாத்தியமாகாத நிலையில், நெய்வேலி, நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீதம் பங்குகளை வாங்கியது போன்று, அதிக லாபம் ஈட்டக் கூடிய தடுப்பூசி பூங்காவையும் தமிழக அரசு வாங்கி நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com