

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கால்நடை மருந்தகத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் செல்லப்பிராணிகளுக்கான வெறி நோய் தடுப்பூசி மற்றும் கால்நடை வளர்க்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் வெறிநோய் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து வெறிநோய் தடுப்பூசி அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார். இதில் கால்நடை பராமரிப்புத்துறை ஒருங்கிணைந்த மண்டல இணை இயக்குனர் ஜெயந்தி, நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் கார்த்திக் தண்டபாணி, நகர மன்ற துணை தலைவர் வக்கீல் ஜி.கே.லோகநாதன், உதவி இயக்குனர் சாந்தி, நந்திவரம் கால்நடை மருந்தக டாக்டர் சீனிவாசன், அம்மணம்பாக்கம் கால்நடை மருந்தகம் டாக்டர் ஜவகர், நகராட்சி ஆணையாளர் இளம்பரிதி, நகராட்சி பொறியாளர் வெங்கடேசன், நகர மன்ற கவுன்சிலர் ஜெயந்தி ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானம் மற்றும் அறிவுசார் நூலகம் கட்டப்பட்டுள்ள இடத்தை நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து தாலுகா கோர்ட்டு அமைப்பதற்கான இடங்களை மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.