செங்கல்பட்டு: ரூ.1,000 லஞ்சம் வாங்கிய சமூக நல அலுவலர் கைது

அரியனூர் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர், 2 பெண் குழந்தைகள் திட்டத்தில் போடப்பட்டிருந்த வைப்புத்தொகையை புதுப்பிக்க வேண்டும் என மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள ஒரு சமூக நல அலுவலரிடம் கேட்டுள்ளார்.
செங்கல்பட்டு: ரூ.1,000 லஞ்சம் வாங்கிய சமூக நல அலுவலர் கைது
Published on

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமூக நலத்துறையில் ஊர் நல பணியாளராக பணியாற்றி வருபவர் விஜயலட்சுமி. அரியனூர் கிராமத்தை சேர்ந்த மகாலட்சுமி என்பவர் விஜயலட்சுமியை அணுகி, 2 பெண் குழந்தைகள் திட்டத்தில் போடப்பட்டிருந்த வைப்புத்தொகையை புதுப்பிக்க வேண்டும் என்று கூறினார்.

அதற்கு ரூ.1,000 லஞ்சம் தந்தால்தான் புதுப்பிக்க முடியும் என்று விஜயலட்சுமி கூறியதாக தெரிகிறது. இதுகுறித்து மகாலட்சுமி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயன பொடி தடவிய ரூ.1,000 பணத்த்தை மகாலட்சுமியிடம் கொடுத்து விஜயலட்சுமியிடம் லஞ்சமாக கொடுக்கும்படி தெரிவித்தனர்.

அதன்படி அவரும் லஞ்சப்பணத்தை விஜயலட்சுமியிடம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விஜயலட்சுமியை கையும் களவுமாக கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com