செங்கல்பட்டு: இடம் இருந்தால் பெண்களுக்கு தனியாக நவீன பூங்கா அமைக்க நடவடிக்கை- அமைச்சர் கே.என்.நேரு


செங்கல்பட்டு: இடம் இருந்தால் பெண்களுக்கு தனியாக நவீன பூங்கா அமைக்க நடவடிக்கை- அமைச்சர் கே.என்.நேரு
x

நகர்ப் புறங்களில் மாலை நேரத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்த பூங்கா அமைத்து வருகிறோம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சென்னை

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி, செங்கல்பட்டு தொகுதியில் பெண்களுக்கு என்று தனியாக நவீன பூங்கா அமைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசியபோது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:

நகர்ப் புறங்களில் மாலை நேரத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்த பூங்கா அமைத்து வருகிறோம். பூங்கா அமைக்க தேவையான நிதியை முதல்வர் ஒதுக்கீடு செய்து உள்ளார். எனவே இடம் இருந்தால் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story