செங்கல்பட்டு: பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு


செங்கல்பட்டு: பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு
x
தினத்தந்தி 21 March 2025 4:26 PM IST (Updated: 21 March 2025 6:12 PM IST)
t-max-icont-min-icon

மதுராந்தகம் அருகே அரசு பேருந்தில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்து பெண் பயணி உயிரிழந்தார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசு பேருந்தில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகாமி. இவர் மாமண்டூர் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் பணிபுரிந்து வருகிறார். இன்று சிவகாமி வழக்கம்போல் அரசு பேருந்தில் மாமண்டூர் சென்றார். பேருந்து மாமண்டூர் பேருந்து நிலையத்தில் நின்றபோது, சிவகாமி இறங்க முயன்றார்.

அப்போது கால் தடுமாறி சிவகாமி பேருந்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிவகாமியை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story