சென்னை: விமானத்தில் கடத்தி வந்த 1.4 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னையைச் சேர்ந்த 2 பயணிகளை கைது செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் துபாய் மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த சந்தேகத்திற்கிடமான 2 பயணிகளை மறித்து அவர்களிடம் சோதனை செய்தனர்.

அப்போது அவர்கள் வைத்திருந்த கைப்பையில் அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் மறைத்து வைத்து கொண்டுவரப்பட்ட ரூ.1.30 கோடி மதிப்புடைய, 1.4 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல செய்தனர். இதனை கடத்தி வந்த சென்னையைச் சேர்ந்த 2 பயணிகளை கைது செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com