சென்னை: வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டி வெடித்து 3 பேர் பலி - அதிர்ச்சி சம்பவம்

சென்னையில் வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டி வெடித்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை: வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டி வெடித்து 3 பேர் பலி - அதிர்ச்சி சம்பவம்
Published on

சென்னை,

சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் கோதண்டராமன் நகரில் கிரிஜா என்பவர் வசித்துவருகிறார். இவரின் வீட்டில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக குளிர்சாதன பெட்டி திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தில் வீட்டில் இருந்து கிரிஜா, அவரது தங்கை ராதா உறவினர் ராஜ்குமார் ஆகியோர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரி சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். பின்னர், குளிர்சாதன பெட்டி வெடித்ததில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com