சென்னை: பள்ளிக்கு சென்ற 5 வயது சிறுமி கடத்தல் - போலீசார் உடனடியாக மீட்டனர்

தனது பேத்தி எங்கே? என்று பள்ளி ஆசிரியையிடம் கேட்டுள்ளார்.
போலீசார்
Published on: 

சென்னை,

சென்னை எம்.ஜி.ஆர். நகர் மாநகராட்சி பள்ளிக்கு சென்ற சிறுமி கடத்தப்பட்ட நிலையில், போலீசார் துரிதமாகச் செயல் பட்டு மீட்டனர்.

சிறுமி

சென்னை எம்.ஜி.ஆர்.நகர் கோவிந்தசாமி தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 30). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சாமூண்டிஸ்வரி (27), இந்த தம்பதிக்கு யோக லட்சுமி, தர்ஷினி, மவுலிகா ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் யோகலட்சுமி, தர்ஷினியும் அதே பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பும். மவுலிகா எல்.கே.ஜி. வகுப்பும் படித்து வருகின்றனர்.

மவுலிகாவை அவரது பாட்டி சாந்தி தினமும் பள்ளிக்கூடத்துக்கு அழைத்து சென்று வந்துள்ளார். அதன்படி அவர் நேற்று மதியம் 3.15 மணிக்கு பேத்தியை அழைக்க வந்தார். அப்போது அவரது வீட்டின் மேல் வீட்டில் வசித்து வந்த பிரியா என்ற பெண், என்ன பாட்டி இங்கே? என்று கேட்டுள்ளார். அதற்கு அவர். பேத்தியை அழைத்து செல்ல வந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

கடத்தல்

அதற்கு பிரியா, 'உங்கள் பேத்தியை அக்கா (சாமூண்டிஸ்வரி) அழைத்து சென்றுவிட்டார் என்று தெரிவித்துள்ளார். இதனை உண்மை என்று நம்பி சாந்தி வீட்டுக்கு வந்துள்ளார். ஆனால் வீட்டில் பேத்தி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து, மீண்டும் பள்ளிக்கூடத்துக்கு சென்றார். தனது பேத்தி எங்கே? என்று பள்ளி ஆசிரியையிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த ஆசிரியை, அத்தை என்றுக்கூறி பெண் ஒருவர் அழைத்து சென்றார் என்று தகவல் தெரிவித்தார்.

குழந்தை கடத்தி செல்லப்பட்ட சம்பவம் குறித்து எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இதில் சிறுமி மவுலிகா அடிக்கடி பிரியா வீட்டுக்கு சென்று வந்ததும், சமீபத்தில் அவர் பக்கத்தில் வீட்டில் கொலுசை திருடி சிக்கியதால் வீட்டை காலி செய்த தகவலும் கிடைத்தது.

எனவே பிரியாதான், குழந்தை மவுலிகாவை கடத்தி சென்றிருக்கலாம் என்று தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள். இதையடுத்து குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டதாக நேற் நிரவு போலீசார் தெரிவித்தனர்.

X